" "" "

தந்தையை இழந்த 7 வயது குழந்தையை மோசமாக கடித்து குதறிய தாயின் காதலன்..! கன்னியாகுமரியை அதிர வைத்த சம்பவம்..!!

தந்தையை இழந்த நிலையில் அம்மாவுடன் வாழ்ந்து வந்த 7 வயது குழந்தையை அம்மாவின் காதலன் கடித்து கொடுமக் செய்த சம்பவம் கன்னியாகுமரியில் இடம்பெற்றுள்ளது. தூத்தூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண் காதலித்து திருமணம் செய்த நிலையில் மூன்று குழந்தைகள் பிறந்த பின் உடல் நலக்குறைவால் அவரது கணவர் இறந்து விட்டார்.

குழந்தைகளை சசிகலா வளர்க்க சிரமப்பட்டதால் அவரது சகோதரி மூத்த மகள் மற்றும் மகனை வளர்த்து வருகிறார். கடைசி மகனான 7 வயது மகனுடன் சசிகலா வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகன் என்ற நபரின் காதலில் விழுந்துள்ளார் சசி. பின் இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கடந்த ஒரு மாதமாக சசிகலாவின் மகன் நள்ளிரவில் கத்தும் சத்தம் அயலவர்களுக்கு கேட்டுள்ள நிலையில் அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால் பின் பகலில் இந்த சத்தம் கேட்க தொடங்கியதால் சந்தேகத்தின் பெயரில் பொலீஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் குழந்தையை மீட்டு பார்த்த போது உடலில் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்துள்ளது..இரத்தம் வரும் அளவிற்கு பற்களால் முருகன் குழந்தையை கடித்ததால் புண்ணாக இருந்துள்ளது.

உடனடியாக குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்த பொலீஸார் மிருகனிடம் விசாரணை செய்த போது சசிகலாவுடன் மகிழ்ச்சியாக இருக்க விடாததால் குழந்தையை கடித்ததாக கூறியுள்ளார். முருகனை கைது செய்ய முயன்ற போது தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது, பொலீஸார் முருகனை தேடி வருகின்றனர்..!!