" "" "

“எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை, இராணுவத்தினரே எங்களை சுட்டனர்” செட்டிகுளம் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப் பட்ட இளைஞர் பேட்டி.!!

நேற்றைய தினம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளது.

சம்பவம் குறித்து இராணுவத்தினர் கூறுகையில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது இளைஞர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதனால் உடனடியாக செயற்பட்ட இராணுவத்தினரும் குறித்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்தனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பொலீஸாரும் இதனை வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாதிக்கப் பட்ட இளைஞர்கள் கூறுகையில் செட்டிக்குளம் பேராறு பகுதியில் நண்பர்களுடன் மரம் வெட்டச் சென்றதாகவும், மரங்களை அறுத்து வைத்துவிட்டு வீடு திரும்பிய போது மறைந்திருந்த இராணுவத்தினர் தங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மரம் அறுக்கும் பொருட்கள் தவிர துப்பாக்கி தங்களிடம் இருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மரம் அறுப்பதால் பயந்து பயந்து சென்று வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.!!