" "" "

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தியாவில் இருந்து ஒலிக்கும் ஆதரவு குரல்கள்.!! இது காட்டு மிராண்டி தனம் என இலங்கை அரசுக்கு எதிராக கண்டனங்கள்.!!

நேற்று இரவு தமிழ் மக்களின் உணர்வுகளோடு இலங்கை அரசு விளையாடிய மற்றுமொரு கறைபடிந்த நாளாகும். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எண்ணில் அடங்காத அளவு தமிழ் மக்கள் கொன்று குவிக்கப் பட்டனர். பிரிந்தது தமிழ் மக்களின் உயிர் என்பதால் கேட்பார் இல்லாமல் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. மற்றவர்களுக்காக உணர்வுகள் இல்லாமல் உறவுகளால் வாழ முடியுமா என்ன.?

பல்கலைக்கழகம் மாணவர்களால் துடிதுடித்து இறந்த எமது உறவுகளுக்காக ” முள்ளிவாய்க்கால் நினைவு தூபி” யை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைத்தார்கள். மே மாதத்தில் இன அழிப்பு நாள் இங்கு கண்ணீருக்கு மத்தியில் நினைவு கூறப்பட்டு வந்தது. ஆனால் நேற்றிரவு இது அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் அழிக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும் மிரட்டல் விடுக்கப் பட்டது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த செய்து ஒவ்வொரு தமிழனுக்கும் மிக வேதனையான விடயமாகும். மரணித்தவர்களை கூட நினைவு கூற கூடாது என்ற சட்டம் உள்ள நாடு இலங்கை மட்டும் தான். இந்த செய்தி அறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ” இது மிகவும் தவறான செயலாகும், அப்பாவி மக்களை நினைவு கூறும் நினைவு தூபியை இடித்தது வருத்தமளிக்கிறது,

இதற்கு எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன் என கூறியிருந்தார். அதே போல் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் நடிகருமான சீமான், இது போன்ற காண்டு மிராண்டி தனங்களை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார், இவர்களுடன் இயக்குனர் கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேர்மையற்ற முறையில் செயற்படும் சிங்கள அரசை “தமிழ் பேரரசு கட்சி” வன்மையாக கண்டிக்கிறது. புதைகுழியில் கூட தமிழர்களை நிம்மதியாக உறங்க விடாமல் கெடுக்க இந்த அரசால் மட்டுமே முடிகிறது என தொடர்ந்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.!!