" "" "

இத்தனை விடயத்தில் சீமானுடன் இருந்தேன், என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். என்னை ஏமாற்றியது இந்த நடிகருக்கும் தெரியும்..நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார்..!!

சமூக வலைத்தளத்தில் தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருப்பவர் நடிகை விஜயலட்சுமி. நாம் தமிழரசு கட்சியின் தலைவரும் நடிகருமான சீமானால் தனது வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வந்த விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப் பட்டார்.

இந்த நிலையில் விஜயலட்சுமி தொடர்ந்தும் சீமான் மீது குற்றச் சாட்டுகளை அடுக்கி வருகிறார். இது குறித்து பேசியுள்ள விஜயலட்சுமி எனக்கும் சீமானுக்குமான உறவு அனைவரும் அறிந்திருந்தாலும் எத்தனை நெருக்கமான உறவு என்பதை இயக்குனரும் நடிகருமான அமீர் அவர்கள் அறிந்துள்ளார்.

அனைத்தும் தெரிந்த அமீர் அமைதி காத்து வருகிறார், இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என கூறியுள்ளதோடு நானும் சீமானும் எவ்வளவு நெருக்கமாக இருந்தோம் என்பதை தெரிந்துகொள்ள சற்று பின்னோக்கி செல்லுங்கள் என தெரிவித்துள்ளதோடு,

பாளையங்கோட்டை, காளபாட், கோயம்புத்தூர், ராமஷ்வரம், போன்ற இடங்களில் கைது செய்யப் பட்ட போது அனைத்து இடங்களில் அவருடன் நான் இருந்தேன். எப்போதும் அவருடன் இருந்தேன் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என தெரிவித்துள்ளார்..!!