" "" "

மர்ம மரணம் என பதிவு செய்யப் பட்ட 23 வயது பெண்ணின் மரணம்..! கொடூரமாக கொலை செய்த தந்தை..! வைரலாகும் SMS..!!

பெற்ற மகளை கொலை செய்துவிட்டு மர்ம மரணம் என நாடகமாடிய பெற்றோர் விசாரணையின் போது சிக்கிக் கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாடு தீயணைப்புத் துறையில் பணிபுரியும் பாலாஜி என்பவரின் 23 வயது மகள் செந்தாரகை. இவர் கல்லூரி படிப்பை முடித்த உடனேயே இவருக்கும் யுவராஜ் என்பவருக்கும் பாலாஜி திருமணம் செய்து வைத்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் செந்தாரகைக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இதனால் திருமணமாகி ஒரே வாரத்தில் தாய் வீட்டுக்கு வந்தார். இதனால் பாலாஜிக்கும் செந்தாரகைக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் குளியலறைக்கு சென்ற செந்தாரகை நீண்ட நேரமாக வெளியே வராததால் தேடி பார்த்த போது அங்கு மரணமடைந்திருந்தார்.

இந்த நிலையில் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக கூறி மகளின் சடலத்தை பெற்றோர் அடக்க முயன்றதால் சந்தேகத்தின் பெயரில் அயலவர்கள் பொலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சடலத்தை கைப்பற்றிய பொலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் செந்தாரகை கழுத்து நெரித்து கொல்லப் பட்டுள்ளது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தந்தை பாலாஜியிடம் நடத்திய விசாரணையில் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றிய பொலீஸார் பாலாஜியை மதுராந்தம் கிளை சிறைசாலையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தாரகை தன்னை மீட்கும் படி மாதர் சங்க மாநில செயலாளருக்கு அனுப்பிய SMSகள் தற்போது வைரலாகி வருகிறது..!!