“இலங்கையில் இருந்து உயிர் தப்பி இந்தியா வந்தார், ஆனாலும் கொன்று விட்டார்களே.” 40 நாள் குழந்தையை கையில் சுமந்து கதறி அழும் இளம் பெண்.!!
இலங்கையில் இருந்து உயிரை கையில் பிடித்து இந்தியா சென்ற இளைஞர் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கொல்லப் பட்டதாக சாம் டார்வின் என்ற இளைஞரின் மனைவி மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்..கடந்த 18ம் திகதி எல்லை தாண்டி இலங்கைக்குள் சென்ற நான்கு மீனவர்கள் சடலமாக 24ம் திகதி உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
18ம் திகதி இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப் பட்டனர் என சக மீனவர்கள் கூறிகின்ற போதும் இவர்கள் சென்ற விசைபடகு கவிழ்ந்து 4 மீனவர்களும் காணாமல் போனதாக இலங்கை கடற்படையினர் கூறியதுடன் 20ம் திகதி சடலங்களை மீட்டனர். 24ம் திகதி உறவினர்களிடம் ஒப்படைந்தனர்.
இந்த 4 பேரில் ஒருவர் தான் சாம். இவர் 2 இராணுவத்தினரின் துன்புறுத்தல் காரணமாக 2009ம் ஆண்டு தப்பித் தடுமாறி தமிழ் நாடு வந்தடைந்தார். அங்கு இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடல் தொழில்செய்து குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் சாமின் மனைவி 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தைக்கு தாயானார்.
குழந்தையுடன் டைம் செலவு செய்ய முடியவில்லை, இம்முறை கடலுக்கு சென்று வந்து ஒரு வாரம் குழந்தையுடன் இருப்பேன் என கூறிவிட்டு கடலுக்கு சென்ற சாம் சடலமாக தான் வீட்டிற்கு வந்துள்ளார். உயிர் வாழ இந்தியா வந்தார், ஆனால் அவர்களின் கையால் இறந்து விட்டாரே என அவரது மனைவி கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!!