" "" "

“பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் அவர்களின் படுக்கைக்கு செல்ல வேண்டும்” பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகை சாலு சம்மு.!

நடிகை ஷாலு சம்முவிற்கும் பெரிய நடிகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் இடம்பெறும் பாலியல் தொல்லைகள் பற்றி பல நடிகைகள் கூறி வருகின்றனர்.

பலரால் தாங்கள் அனுபவித்த விடயங்கள் பற்றி பகிர்ந்து வருகின்றனர், அண்மையில் நேர்கொண்ட பார்வை அபிராமி, நடிகை ரெஜினா ஆகியோர் தங்களுக்கு சினிமாவில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொண்டனர். இந்த நிலையில் நடிகை ஷாலு சம்முவிடம் ரசிகர்கள் நீங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லையா என கேட்டுள்ளனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதற்கு பதில் அளித்துள்ள சாலு சினிமாவிற்கு வரும் அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறோம், பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பு தேவை இல்லை, படுக்கையை பகிர்ந்துகொண்டால் போதும். இதனை நாம் மாற்ற வேண்டும்.

திறமைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், உடலை ருசித்த பின் கொடுக்கப் படும் வாய்ப்பு தேவையற்றது என தெரிவித்துள்ளார். சாலு சம்மு இதற்கு முதல் விஜய் தேவர்கொண்டா திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், படுக்கையை பகிர்ந்து கொண்டால் மட்டுமே வாய்ப்பு என்பதால் அந்த திரைப்படம் கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.!/