" "" "

கணவரின் காதலை மறைத்து நடிகை சாந்தனி மீது புகார் கொடுத்துள்ள மணிகண்டனின் மனைவி வசந்தி! கணவர் தலைமறைவுக்கு காரணம் என்ன??

கணவனின் காதல் லீலைக்கு துணை போகிறார் என முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவியை நெட்டிஷன்கள் காலாய்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் 5 வருடங்கள் லிவிங் டுகெதர் வாழ்ந்துவிட்டு தற்போது உறவு வேண்டாம் என விலகியதுடன் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுப்பதாக பொலீஸில் புகார் அளித்தார்.

அத்துடன் இருமுறை கர்ப்பமான போது கர்ப்பத்தை கலைக்கும் படி துன்புறுத்தி இரு முறை கரு கலைப்பு செய்ததாகவும் தெரிவித்திருந்த அவர் தனக்கு நீதி வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக மீடியாக்களை சந்திந்த மணிகண்டன் சாந்தனி என்றால் யார் என்றே தெரியாது என கூறி இருந்தார்.

ஆனால் சாந்தினி தன்னுடன் மணிகண்டன் இருந்த புகைப்படங்கள், மற்றும் சாந்தனியை மிரட்டிய மெசேஜ்கள் என அனைத்தையும் ஆதாரமாக வெளியிட்டார். இதனால் மணிகண்டனை கைது செய்ய முயன்ற போது தலைமறைவானார். மணிகண்டனை பொலீஸார் தேடி வரும் நிலையில் அவரது மனைவியான வசந்தி அவர்கள் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் சாந்தினிக்கும் தனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சாந்தனி தனது குடும்பத்தின் நிம்மதியையும் அமைதியையும் கெடுக்கிறார் எனவும் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி வெளியாகி வைரலான நிலையில் வசந்தி தனது கணவரின் குற்றங்களை மறைப்பதாக நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றது.!