" "" "

சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்க சென்ற ஆசிரியையின் வயிற்றில் உதைத்து கொடுமை செய்த பொலீஸார்..! தூத்துக்குடியில் தொடரும் அராஜகம்..!!

தமிழகத்தில் விசாரணை எனும் பெயரில் காவலர்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ள நிலையில் சாத்தான் குள சம்பவத்தின் பின் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை துனிந்து வெளியே சொல்லி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி அண்ணா நகரில் வசிக்கும் சாந்தி என்ற பெண் எஸ்.பி ஜெயகுமாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

குறித்த புகாரில் தூத்துக்குடியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில மற்றும் ஹிந்தி ஆசிரியையாக இருக்கிறேன், எனது அண்ணன் வாசுதேவன் என்பவரை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் கொன்று விட்ட நிலையில் இது தொடர்பாக நான் புகார் அளித்ததால் பெண் என்றும் பார்க்காமல் என் தலைமுடியை இழுத்து விழுத்தி வயிற்றில் இன்ஸ்பெக்டர் உதைத்தார் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.!

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள சாந்தி எனது சகோதரன் வாசுதேவன் தூத்துக்குடி மி வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிகிறார். சம்பவ தினமான பிப்ரவரி மாதம் 22ம் திகதி அவசரமாக மின் பழுது பார்க்கும் வேலை உள்ளதாகவும் , தமிழக முதல்வரின் வருகை இருப்பதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் கூறி 4 மணிக்கு அழைப்பை ஏற்படுத்த எனது அண்ணாவும் காலை 4 மணிக்கே சென்று விட்டார்.

பின் அவர் பிணமாக தான் திரும்பினார். அடையாளம் தெரியாதவர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டதாக அரச வைத்தியசாலையில் வைத்து பொலீஸார் கூறினார்கள். விசாரித்த போது பொலீஸார் குறிப்பிட்ட குறித்த பகுதியில் விபத்து ஏதும் இடம்பெறவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

அங்கிருந்த கடைகாரர்கள் சிலர் ரோந்து பணியில் சென்ற பொலீஸாரின் பைக்கில் இரத்த காயத்துடன் எனது அண்ணா இருந்ததை கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் தமிழ்நாடு உள்துறை அதிகாரியிடம் எனது அண்ணாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என புகாரளித்தேன். இந்த நிலையில் ஜூன் முதலாம் திகதி நான் கொடுத்த புகாரை விசாரிக வேண்டும் என தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்தார்கள்.

அங்கு சென்ற போது சாதாரண விபத்தை பெரிது படுத்த வேண்டாம் என கூறி புகாரை வாபஸ் வாங்கும் படி இன்ஸ்பெக்டர் கூறினார் முடியாது என நான் பிடிவாதமாக இருந்தேன். இதனால் கடுப்பான இன்ஸ்பெக்டர் என் தலைமுடியை இழுத்து கீழே விழுத்தியதுடன் வயிற்றில் உதைந்தார்.

பின் இழுத்து சென்று கன்னத்திலும் முதுகிலும் அடித்தார் வலி தாங்காமல் அழுதேன், அதன் போது பெண் பொலீஸார் ஒருவரிடம் பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது என எழுது வாங்கிய இன்ஸ்பெக்டர் பெண் பொலீஸாரை மிரட்டியதால் பெண் பொலீஸ் என்னை கைது செய்ததாக கூறி தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தார்கள்.

தற்போது நிபந்தனை ஜாமீனின் வந்துள்ளேன், தயவு செய்து என் அண்ணாவுக்கும் எனக்கும் நீதி கிடைக்க உதவுங்கள் என புகார் அளித்தததை தொடர்ந்து எஸ்.பி ஜெயகுமார் தூத்துக்குடி டவுுன் டிஎஸ்பி கணேஷை இந்த புகாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்..!!