" "" "

பிரபல நடிகை சாந்தினியை காதலித்து ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார்.! வைரலாகும் புகைப்படங்களால் குழப்பத்தில் ரசிகர்கள்.!!

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த சாந்தினி சில வருடங்கள் காணாமல் போய் இருந்தார்.

இந்த நிலையில் திடீரென மீண்டும் வந்துள்ள நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி 6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன் கூலிப் படையை ஏவி தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்யப் முயற்சிப்பதாக பொலீஸில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறியுள்ள சாந்தினி 6 வருடத்திற்கு முன்பு இருவரும் காதலிக்க ஆரம்பித்த போது என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். அவரை நம்பு ஒன்றாக வாழ ஆரம்பித்து கர்ப்பமாகவும் இருந்தேன். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என கரு கலைப்பு செய்யச் சொன்னார்.

அவரை நம்பி அதையும் செய்து விட்டேன், இப்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதுடன் எனது குடும்பத்தினரை கூலி படை வைத்து மிரட்டுகிறார். எனது வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. தயவு செய்து இதற்கு சரியான தீர்வை பெற்றுத் தாருங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.!!