நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் முடிந்துவிட்டதா.!? நயன்தாரா போட்ட பதிவு இதோ..!!

கடந்த சில நாட்களாக அதிகம் பேசப் படுகின்ற விடயங்களில் ஒன்றாக நயன்தாரா விக்னேஷ் காதல் விடயம் உள்ளது. ஏற்கனவே பிரபு தேவா, மற்றும் சிம்புவை காதலித்து இரண்டு காதலும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் திருமணம் நடக்கவில்லை. அதன் பின் அண்மையில் நயன்தாராவிற்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது, இதில் விக்னேஷ் சிவன் கலந்துகொள்ளவில்லை, அத்துடன் எல்லாவற்றிக்கும் நயன்தாராவிற்கு வாழ்த்து கூறும் விக்னேஷ் சிவன் இரண்டு விருதை ஒரே மேடையில் பெற்ற போதும் அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை.

இதனால் இவர்கள் பிரிந்து விட்டதாகவும் இந்த காதலிலும் நயன் தோற்று விட்டார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால் இதில் உண்மை இல்லை என்பது போல் நயன்தாரா அதிவொன்றை இட்டுள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் தர்பார் திரைப்பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் வரவில்லை என நயன்தாரா கூறியதை நம்பாததால்..

விருது விழாவில் நயன்தாரா அணிந்த சாரியுடன் விக்னேஷ் சிவன் உடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்ததுடன், மிஸ் யூ விக்கி என பதிவிட்டுள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் காதல் முடியவில்லையா என கேட்டு வருகின்றனர்..!!