" "" "

பிக் பாஸ் சீசன் 4ல் 2ம் இடத்தை பெற்ற பாலாஜி போட்ட முதல் பதிவு, கொண்டாடும் ரசிகர்கள்.!!

நேற்று நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 பைனல் கொண்டாட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்தவர் பாலா. 24 வயதான பாலாவின் தாய் தந்தையர் குடி பழக்கத்திற்கு ஆளானதால் குடும்பமே கேள்விக் குறியானது. இதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய பாலா மிஸ்டர் இந்தியா பட்டமும் வென்றார். ஆனால் அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

குழந்தை தனமான சேட்டைகள் அதிகம் இருந்தாலும் கோபம் தான் பாலாவை ஆண்டது. எந்த ஒரு விடயத்தையும் பொறுமையாக பாலா நடத்தவில்லை. ஆனால் நியாயமான கோபக் காரராகவே இருந்தார். இதனால் தான் யார் என்றே தெரியாத ஒரு முகத்திற்கு 6.5 கோடி வாக்குகள் கிடைத்தது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப் பட வேண்டும் என பலர் கூறிய போதும் பாலா செய்வது சரி என அவரது ரசிகர்கள் உறுதியாக நின்றனர். இந்த நிலையில் நேற்று பைனல் கொண்டாட்டத்தின் போது ரியோவை அழைத்து வர ஷெரின் சென்றார்..வீட்டிற்குள் சென்ற செரின் பாலாவுடன் கோபமாக சில நேரங்களில் நடந்துகொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷெரினை திட்டி தீர்க்க ஆரம்பித்தனர்.

இதற்கு இன்றைய தினம் பாலாஜி பதிவின்றை இட்டுள்ளார். அதில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி என கூறியுள்ளார். அத்துடன் ஷெரின் நேற்றைய தினம் விளையாட்டாகவே பேசினார். அவர் என் நல்ல தோழி மற்றும் அக்கா என குறிப்பிட்டுள்ளார்.!