" "" "

சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக வெளியான முக்கிய விடயம்..! திடீரென தலைமறைவான முன்னாள் காதலி..!!

சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படும் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுஷாந்த் சிங் மற்றும் ரியா சக்ரபோர்த்தி இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பின் ரியா தன்னை தன்னை விட 40 வயது அதிகமான ஒருவருடன் உறவில் இருந்து வந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இருப்பினும் சுஷாந்துடன் நட்பில் இருந்தார். அத்துடன் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு ரியா தான் காரணம் என அனைவரும் கூறிவந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா அவர்கள் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு ரியா தான் காரணம் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில் அன்பாக நெருங்கி பழகிய பின் சுஷாந்திடம் இருந்து பிரிந்ததுடன், பொருளாதார ரீதியாக சுஷாந்தை ஏமாற்றி உள்ளார், அத்துடன் மனரீதியான துன்புறுத்தல்களை செய்து வந்துள்ளார். அத்துடன் சுஷாந்தை மன நலம் பாதிக்கப் பட்டவர் ( சைக்கோ) என நண்பர்களிடம் கிண்டல் செய்வது மற்றும் குறுந்தகவல் அனுப்புவது என தற்கொலைக்கு தூண்டும் செயல்களை செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

புகாரை ஏற்றுக் கொண்ட பொலீஸார் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக மும்பை சென்றுள்ள நிலையில் ரியா வீட்டில் இருந்து தலைமறைவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ரியாவிடம் விசாரணை நடத்தப் பட்டிருந்த போதும் ரியா தலைமறைவாகி உள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!