வடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு திரும்பியது..!!!

சிங்கப்பூரில் வடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது. வடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு திரும்பி விட்டதாக SMRT அதன் Twitter பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. காலை 8:30 மணியளவில் சமிஞ்கை கோளாறு காரணமாக கிராஞ்சி ரயில் நிலையத்திற்கும் புக்கிட் கொம்பாக் ரயில் நிலைத்திற்கும் இடையிலான சேவையில் தடை ஏற்பட்டது. தற்போது சேவையில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்ற போதும் பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் இலவச பேருந்து வசதிகள் தொடர்வதாகவும் SMRT தெரிவித்தது.