எதிர்வரும் ஆண்டு குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் குறைப்பு…!!!

சிங்கப்பூரில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் வழங்கப்படவுள்ள மேம்பட்ட மானியங்களின் மூலம் குழந்தைப் பராமரிப்புக்கு அதிகளவான குடும்பங்கள் குறைவான கட்டணங்களையே செலுத்தும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ உறுதி கூறியுள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஐந்தில் ஒரு குழந்தை பராமரிப்பு நிலையம் எதிர்வரும் வருடம் முழுநேரச் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தினாலும், கட்டணங்கள் கட்டுப்படியான அளவிலேயே இருக்கும் என நாடாளுமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் கட்டணங்களை மறு பரிசீலனை செய்து போது மாற்றி உருவாக்குவது வழக்கம் என்பதைத் திரு. லீ தெரிவித்துள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் கட்டண உயர்வு முன்னர் இருந்த அளவில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாதம் சராசரியாக முழுநேரக் குழந்தை பராமரிப்புக் கட்டணங்கள் 35 வெள்ளி அதிகரிக்க கூடும்.
ஆனால், வருமானத்தைப் பொறுத்து ஒவ்வொரு மதமும் கூடுதல் மானியமாக 240 வெள்ளி வரை குடும்பங்கள் பெறலாம் எனத் திரு. லீ தெரிவித்துள்ளார்.