சிங்கப்பூருக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி…!!!

சிங்கப்பூருக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது துணைவியார் மிஷெல் ஒபாமா விஜயம் செய்யவுள்ளனர். இந்த விஜயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தரவிருக்கின்றனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோருடன் தங்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. திரு. ஒபாமா சிங்கப்பூருக்கு முதன் முறையாக வர்த்தகப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றத்தில் இருந்து அனுபவம், தலைமைத்துவம் குறித்த தமது சிந்தனைகள் ஆகியவற்றை அவர் பகிர்ந்துகொள்வார் என்று ஏற்பாட்டாளர்கள் தெரித்துள்ளனர்.

நிகழ்ச்சி, டிசம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் EXPOவில் காலை பதினொன்றரை முதல் பிற்பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சி இடம்பெறும். அதில் சிங்கப்பூர்த் தலைவர்களுடன் உயர்நிலைக் கலந்துரையாடலும் இடம்பெறும்.

திருமதி ஒபாமா, தமது வாழ்வை வடிவமைத்த தனிப்பட்ட மற்றும் பொதுத் தருணங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்வார். அமெரிக்கத் தலைமகளாக விளங்கிய அனுபவத்தை அவர் எடுத்துரைப்பார். அவரது நிகழ்ச்சி டிசம்பர் 14 ஆம் திகதி சிங்கப்பூர் EXPOவில் இரவு ஏழரை மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள கட்டணம் உண்டு என்று ஏற்பாட்டு நிறுவனமான The Growth Faculty தெரிவித்துள்ளது.