சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையில் தீபாவளி வரவேற்பு ஆரம்பம்…!!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த நாட்டின் முக்கியமான விமான நிலையமாகும். சிங்கப்பூரில் வியாபாரப் பகுதியில் இருந்து 17.2 கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் தீபாவளியை வரவேற்க யானை அலங்காரங்கள் தயாராகி வருகின்றன.

கழுத்தில் பூமாலை போட்டுக்கொண்டு, தாமரை மேல் குட்டி யானையும், பெரிய யானையும் உட்கார்ந்துக் கொண்டு சிரிப்பது போல காட்சி கொடுக்கின்றது. யானையின் தும்பிக்கையிலிருந்து நீரூற்று போல் தண்ணீர் வெளியாகும் என்று அதை நிறுவிக்கொண்டிருந்த தோட்டக்கலை நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வண்ணம் வாழைக்கன்றுகள் அலங்காரிக்கப்படுகின்றது.
முழு அலங்காரமும் இன்று இரவு முழுமையாக தயாராகிவிடும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.