மூளையின் செயல்திறன் குறைபாட்டுக்கும் கண்நோய்களுக்கும் இடையில் தொடர்புள்ளதாக ஆய்வில் வெளிவந்த தகவல்..!!!

மூளையின் செயல்திறன் குறைபாட்டுக்கும், கண்நோய்களுக்கும் இடையில் தொடர்புள்ளதாக அண்மையில் ஆய்வு ஒன்றில் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு ஆய்வாளர்களின் தலைமையில் அனைத்துலகக் குழு அந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. Glaucoma எனப்படும் கண்-அழுத்த நோய்க்கும், Alzheimer, முதுமை மறதி நோய் போன்ற மூளைச் செயல் திறன் தொடர்பான நோய்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதிகளவு ஆப்பிரிக்க வம்சாவளியினரிடம் அத்தகைய தொடர்பு காணப்படுகிறது. Glaucoma வெறும் கண்ணோடு தொடர்புடைய நோயாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தை அண்மை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளது. Glaucoma பற்றிய புதிய ஆய்வுக் கண்ணோட்டத்துக்கும், அதற்கான சிகிச்சை தொடர்பில் புத்தாக்க வழி முறைகளை ஆய்வு செய்யவும் அவை வித்திட்டுள்ளன.

சிங்கப்பூரின் A*STAR ஆய்வு நிறுவனம், சிங்கப்பூர் மரபணு நிலையம், சிங்கப்பூர்க் கண் மருத்துவ ஆய்வு நிலையம், சிங்கப்பூர் தேசியக் கண் சிகிச்சை நிலையம், Duke-NUS மருத்துவக் கல்லூரி, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் 2 உள்ளிட்டவை அந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் சஞ்சிகையில் ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.