தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது, மறுவேலை வாய்ப்பு வயதை அடுத்த வருடம் உயர்த்த தீர்மானம்…!!!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதையும் மறுவேலை வாய்ப்பு வயதையும் உயர்த்துவதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் கூறியுள்ள காலத்துக்கு ஒரு வருடத்திற்கு முன்கூட்டியே செயற்பட்டுக்கு வருவதைக் தெரிவிக்கின்றது. சிங்கப்பூரில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 2022ஆம் ஆண்டு 62 இல் இருந்து 63க்கு அதிகரிக்கப்படும் என்று இந்த வருடத்தின் தேசிய தினக் கூட்ட உரையின் போது அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதோடு ஓய்வுபெற்ற ஊழியர்கள் மறுவேலை வாய்ப்புக்குத் தகுதிபெறும் வயது 2022 ஆம் ஆண்டு 67இல் இருந்து 68க்கு உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 2030க்குள் அந்த வயது வரம்பு 70க்கு அதிகரிக்கப்படும். அந்த மாற்றங்கள் அதிகாரபூர்வமாக நடப்புக்கு வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே சொந்தமாக அவற்றை செயற்பட்டுக்கு கொண்டு வருவதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைப்பின் நிர்வாக, ஆய்வுப் பிரிவில் மாற்றங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படும். அதையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த 12 சமூக நிறுவனங்களிலும் மாற்றங்கள் நடப்புக்கு வரும்.

ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் சுமார் 430 ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மறுவேலை வாய்ப்பு வயதை உயர்த்துவதால் சுமார் 280 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.