சிங்கப்பூரில் இணையம் தொடர்பான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு…!!!

சிங்கப்பூரில் இணையம் தொடர்பான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் இடையே அதிகரித்திருப்பதாக இணையப் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் அனைத்து இணையக் கணக்குகளுக்கும் இரண்டு கட்ட பாதுகாப்பு செயற்பாடுகளை பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த வருடம் மட்டும் அந்த எண்ணிக்கை 26 விழுக்காடாக இருந்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தனிநபர் தொலைபேசிகளில் பாதுகாப்புச் செயலிகளைப் பதிவு இறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 53 விழுக்காட்டிலிருந்து 45 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. தொலைபேசியில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு பாதுகாப்புச் செயலிகள் அவசியமானவை என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதிகளவானவர்கள் அதைப் பதிவு இறக்கம் செய்வதில்லை.

கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் இணைய மோசடி போன்ற குற்றங்களுக்கு உள்ளாக்குவதாக குறித்த அக்கறையை செலுத்தியுள்ளனர். அவர்களுள் 30 விழுக்காட்டினர் மட்டுமே அத்தகைய சூழ்நிலை தங்களுக்கும் நேரக்கூடும் என்று கூறுவதாக தெரிவிக்கப்பட்டது.