சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலி..!!!

சிங்கப்பூரின் லெண்ட்டோர் அவென்யூவில் வீதியில் குழந்தையைத் தள்ளுவண்டியில் கூட்டிச் சென்ற 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இந்த இல்லப் பணிப்பெண் என்று நம்பப்படும் பெண் 2 வயதுடைய குழந்தையைத் தள்ளுவண்டியில் கூட்டிச் சென்று வீதியைக் கடக்கும் போது கார் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

அவரையும் குழந்தையும் கார் மோதும் முன், குழந்தையை ஆபத்தில் இருந்து அவர் காப்பாற்றினார். ஆனால், கார் குறித்த பெண் மீது மோதியுள்ளது. அதையடுத்து மருத்துவனைக்குக் அழைத்து செல்லப்பட்ட அந்த பெண் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த தகவலை Shin Min Daily நாளேடு வெளியிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காரின் ஓட்டுநரான 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.