நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு தடை விதித்ததை தொடர்ந்து மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் பிரதமரை சந்தித்து முறையிட தீரமானம்..!!!

நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு தடை விதித்ததை தொடர்ந்து மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் பிரதமரை சந்தித்து முறையிட தீரமானம் எடுத்துள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சிங்கப்பூரில் அங் மோ கியோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் மின்ஸ்கூட்டரை நடைபாதைகளில் ஓட்டுவதற்கு தடை விதித்தது தொடர்பாக தங்களது ஆதங்கங்களையும், கவலையில் தெரிவிக்க, சுமார் 50 மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மக்கள் சந்திப்புக் கூட்டம் நேற்று இரவு இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்ட மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்களில் அதிகமானவர்கள் GrabFood விநியோக ஓட்டுநர்களாகும்.

டெக் கீ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிங்கப்பூர் பிரதமருமான லீ சியென் லூங்கை அவர்கள் சந்திக்கத் தீர்மானித்துள்ளனர். இரவு 8 மணிக்குத் ஆரம்பிக்கவுள்ள இந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்காக, மாலை 6 மணிக்கே சில மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து அங்கு கூடியுள்ளனர். மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்களின் பிரதிநிதி ஒருவர், மக்கள் சந்திப்புக் கூட்டத்தின் தொண்டூழியர் ஒருவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அங்குள்ள மற்றோர் ஓட்டுநர்கள் அந்தத் தொகுதிக்கான அடித்தள ஆலோசகர் டாக்டர் எஸ். வாசுவைச் சந்தித்து பேசியுள்ளனர்.