வேலை நேரத்தின் போது சக ஊழியரிடம் ஆபாசக் காணொளியைக் காட்டிய ஆடவருக்குச் சிறை…!!!

சிங்கப்பூரை சேர்ந்த 41 வயதுடைய ஹேரிஸ் கார்டர் சாய் என்பவர் வேலை நேரத்தில் போது சக ஊழியரிடம் தாம் இடம்பெற்ற ஆபாசக் காணொலியை குறித்து பேசிக்கொண்டிருந்த நிலையில் அவர் தனது தொலைபேசியில் இருந்த ஆபாசக் காணொலியை குறித்த பெண் ஊழியரிடம் காட்டினார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதையடுத்து ஆபாசக் காணொலியில் இடம்பெற்ற தமது உடல் உறுப்புகள் பற்றியும் அந்த ஆடவர் பேசத் தொடங்கினார். பின்னர் அதை கேட்ட அந்த பெண் ஊழியர் அதிர்ச்சியடைந்த நிலையில் பொலிசாரிடம் புகார் தொடுத்தார். சாயின் கைத்தொலைபேசியை சோதனை செய்த போது அதில் 47 ஆபாசக் காணொலிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது 5,000 வெள்ளி பிணையில் இருக்கும் சாய், அடுத்த வாரம் சிறைத்தண்டனையைத் தொடங்குவார். ஆபாசக் காணொளியை வைத்திருந்ததற்கு அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத்தண்டனையும், 40,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.