" "" "

விமானத்தில் பறந்து வந்து சகோதரிகள் மூவர் சேர்ந்து செய்யும் கேவலமான செயல்..!! இப்படியும் பெண்களா.?

பணத்தின் மீதான ஆசையால் சகோதரிகள் மூவர் செய்து வந்த மோசமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இலங்கை, லண்டன், மற்றும் இந்தியா என மூன்று நாட்டில் வசித்து வரும் சகோதரிகள் பணம் வீட்டில் தாராளமாக இருந்தாலும் விமானத்தில் சென்று திருடுவதை தொழிலாக கொண்டுள்ளனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

லண்டனை சேர்ந்த திருமதி செல்வி சின்னத்தம்பி, இலங்கையை சேர்ந்த திருமதி பராசக்தி ரஞ்சித்குமார் இந்தியாவை சேர்ந்த திருமதி ஸ்ரீமதி பாண்டியராஜன், ஆகிய சகோதரிகள் மூவரும் சிறு வயதில் இருந்தே திருடுவதில் கை தேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

இந்த பழக்கம் திருமணமான பின்பும் தொடர்ந்த நிலையில் கோயில் திருவிழாக்களில் தங்கள் கை வரிசையை காட்டி வந்துள்ளனர். கோயில்களில் அதிக நகை போட்டு வரும் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களின் நகைகளை திருடி விற்று விடுகின்றனர். பின்னர் பணத்தை மூன்றாக பிரித்து சகோதரிகள் மூவரும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

அண்மையில் கோவையில் கோனியம்மன் ஆலைய தேர் திருவிழா இடம்பெற்றுள்ளது. இதன் போது வழமை போல் ஒன்று கூடிய சகோதரிகள் நகை திருடிய போது மாட்டிக் கொண்டனர். மூவரையும் கைது செய்த பொலீஸார் சிறையில் அடைத்தனர். இருப்பினும் ஜாமினில் வெளியே வந்த மூவரும் முடக்கப் பட்ட தங்கள் பாஸ்போர்ட் வேண்டும் என நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் புகாரை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து பொலீஸார் கூறுகையில் இவர்கள் மூவரும் பல இடங்களில் நகை கொள்ளையிட்டுள்ளனர்.இவர்களது பாஸ்போர்ட்டை கொடுத்தால் தப்பிச் சென்று விடுவார்கள் என தெரிவித்துள்ளனர்..!!