" "" "

முதலிரவில் மனைவியுடன் வீட்டை விட்டு ஓடிப்போன கணவர்.! தமிழகத்தில் நடந்த சம்பவம்.!!

முதலிரவில் மனைவியுடன் கணவர் ஓட்டம் பிடித்த சம்பவம் ஒன்று சித்தூர் பெத்த பஞ்சானி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் கங்கவரம் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கணேஷ். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். தன்னுடன் பணி புரிந்த பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் காதலுக்கு 6 வருடங்கள் கடந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர். இரண்டு வீட்டாரின் சம்மதம் பெற்றுக் கொள்ள விரும்பிய இவர்கள் இந்த வருட இறுதியில் பேசி திருமணம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் கணேஷுக்கு கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இருந்ததால் கிரமத்திற்கு அனுப்பப் பட்டதுடன் வீட்டு தனிமையில் இருக்கும் படி கூறப்பட்டது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி படுத்தப் பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வந்தார் கணேஷ். இந்த நிலையில் பெற்றோர் அதே ஊரை சேர்ந்த யுவதி ஒருவரை கணேஷுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். பெண்ணின் அழகை பார்த்து மயங்கிய கணேஷ் காதலியை மறந்து திருமணத்திற்கு சம்மதம் சொல்லியுள்ளார்.

திருமணத்திற்கு முதல் நாள் கணேஷுக்கு திருமணம் என்ற விடயம் காதலிக்கு தெரியவர காதலனை தேடி வந்துள்ளார். அதற்குள் திருமணம் நடந்து முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனால் கடுப்பான காதலி காதலனில் வீட்டில் இருந்து கத்தியுள்ளார். இதனால் கடுப்பான குடும்பத்தினர் கணேஷின் காதலியை தாக்கியுள்ளனர்.

உடனடியாக பொலீஸ் நிலையம் சென்ற காதலி திருமண ஆசை காட்டி ஏமாற்றிய கணேஷையும், தன்னை தாக்கிய குடும்பத்தினரையும் கைது செய்யும் படி புகார் அளித்துள்ளார். முதலிரவில் தன் மனைவியை பிரித்துவிடுவார்கள் என நினைத்த கணேஷ் இரவோடு இரவாக மனைவியை கூட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!!