" "" "

17 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை.! கண்ணீருடன் தவிக்கும் பெற்றோர்.!

இந்தோனேசியாவில் 17 வயது சிறுமி ஒருவர் தூங்கிக் கொண்டே இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் Banjarmasin பகுதியைச் சேர்ந்த Siti Raisa Miranda என்ற 17 வயது சிறுமியே இவ்வாறு தூங்கிக் கொண்டே இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு வழமை போல் Siti Raisa வீட்டில் தூங்கிய நிலையில் சுமார் 13 நாட்கள் தொடர்ந்து தூங்கிக் கொண்டே இருந்தார்.

சிறுமியால் எழுந்து அமர முடியவில்லை. அவருக்கு உணவு உறக்கத்தில் இருக்கும் போதே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக Siti Raisaவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆரம்பத்தில் என்ன என்று உறுதிபடுத்த முடியாமல் தடுமாறினால் கூட,

பின்னர் உலகில் ஒரு மில்லியன் மக்களில் ஒருவரை பாதிக்கும் மிக அரிதான நோயான Kleine-Levin நோயின் அறிகுறி என கண்டுபிடித்தனர். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்ற போதும் அவரது நிலையில் மாற்றம் என்பது சிறிதும் இல்லை.

வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் சிறுமி நலமாக இருக்கிறாரா.? உயிருடன் இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். தற்போது Sleeping Beauti என அழைக்கப் இந்த சிறுமியின் நிலை மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் பெற்றவர்களுக்கு மிக மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.!!