“பேரான்டிகளா” தப்பு பண்ணாதீங்கடா என அன்போடு கெஞ்சிய 80ஸ் 90ஸ் ஆண்களின் விருப்பத்துக்குறிய தாத்தா சிவராஜ் சற்று முன்னர் மரணம்.! ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போம்.!!
80’s 90’s கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த சித்த வைத்தியர் சிவகுமார் சிவராஜ் தனது 71வது வயதில் இன்று காலமானார். ஆண்மை குறைவு, குழந்தை இன்மை போன்றவற்றிக்கு சிறந்த சித்த மருத்துவம் செய்து வந்த சிவராஜ் அவர்கள் பல ஆண்களின் குடும்ப வாழ்க்கை வெற்றியாக இருக்க காரணமாக இருந்தவர்.
“பேராக்குழந்தைகளா” அல்லது பேரான்டிகளா என்று அன்போடு சொல்லும் சிவராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஆண்களுக்கு அறிவுரை கூறி வந்தார். ” பேரான்டிகளா” தப்பு பண்ணாதீங்கடா தாத்தா சொல்றத கேளுங்கடா, போன்ற சிவராஜின் வார்த்தைகள் அன்று பிரபலமாக இருந்தவை.
சில நேரங்களில் சிவராஜ் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூறி இதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் கூறி அழுவதுண்டு. கேலி கிண்டலாக இதனை பார்த்தாலும் பலனடைந்தவர்கள் தான் ஏராளம். இன்று தாத்தா அனைவரையும் விட்டு பிரிந்து விட்டார், தாத்தாவின் ஆன்மா சாத்தியடைய பிரர்த்திப்போம்.!!