" "" "

எச்சரிக்கை : வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது கட்டாயம் பேனை (Pen) எடுத்துச் செல்லுங்கள்.! கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.!!

வெளியே செல்வதாக இருந்தால் பேனை (Pen) எடுத்துச் செல்லுங்கள் என இலங்கை சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த மாத இறுதியில் திடீரென கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆட ஆரம்பித்தது. கொரோனா வைரஸினால் 10 மாதங்களில் வெறும் 3500 பேர் பாதிக்கப் பட்டும் 12 பேர் மரணமடைந்தும் இருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரமாக மாறியது.

இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 69 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவ இரண்டு இடங்கள் காரணமாக இருந்தது, ஒன்று ஆடை தொழிற்சாலை, அடுத்தது மீன் மார்கெட். இங்கிருந்து தான் வேகமாக பரவி இருந்தது. இதனை வைத்து நடத்திய ஆய்வில் பணம் மற்றும் பேனையின் ஊடாக கொரொனா வைரஸ் பரவி இருக்கலாம் என கூறப்படுகின்றது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வங்கி, அல்லது முக்கிய இடங்களுக்கு செல்லும் போது இன்னுமொருவரின் பேனையை பயன்படுத்துவதால் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ பணமும் காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

அதனால் வெளியே செல்லும் போது முடிந்த அளவு உங்கள் தேவைக்கேற்ற பணம் கொண்டு செல்லுங்கள். பேனை எடுத்துச் செல்லுங்கள். யாரிடமும் வெளியே ஏதும் வாங்காதீர்கள், வீதியோர உணவுகளை தவிர்க்கும் படியும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.!