இரண்டாவது குழந்தைக்கு தாயாகி உள்ள நடிகை சினேகா. குவியும் வாழ்த்துக்கள்..!!
புன்னகை அரசி கே ஆர் விஜயாவிற்கு பின் அந்த இடத்தை நிரப்ப வந்தவர் தான் நடிகை சினேகா. சினிமாவிற்கு வந்து குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சினேகா புன்னகையால் அனைவரையும் கவர்ந்தார்.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சினேகா குழந்தை பெற்றுக் கொண்ட பின் மீண்டும் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் வலம் வர ஆரம்பித்தார். தற்போது தனுஷிற்கு ஜோடியாக திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள சினேகா நடிப்பாரா என்பது தற்போது சந்தேகமாகி உள்ளது. காரணம் தற்போது சினேகா கர்ப்பமாகி உள்ளாராம்.
ஏற்கனவே விஹான் என்ற ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதி முறை சினேகா தாய்மை அடைந்திருப்பதை அவர்களது குடும்பம் கொண்டாடி வருகிறது. என தாய்மை அடைந்திருக்கும் சினேகாவிற்கு எங்கள் வாழ்த்துகளும்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.