பிரபல சின்னத்திரை நடிகரின் அழகிய மகள் பிளாஸ்டிக்கை விழுங்கி மரணம்..!
குழந்தைகள் விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சிலர் தங்கள் குழந்தைகளுக்கு என்ன வாங்கி கொடுக்கிறோம் என தெரியாமல் வாங்கி கொடுத்து விடுகின்றனர். இதன் விபரீதம் தெரியும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகின்றீர்கள்.
அப்படி ஹிந்தி பிரபல சீரியல் நடிகர் பிரதிஷ் வோரா தன்னுடைய ஆசை மகளை இழந்துள்ளார். ஹிந்தியில் சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த நடிகர் பிரதிஷ் தனது ஆசை மகளுக்கு பொம்மைகளை வாங்கி கொடுத்துள்ளார். வித விதமான அளவுகளில் பொம்மை இருந்துள்ளது.
பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிய கார்டூன் பொம்மை ஒன்றை தவறுதலாக விழுங்கியுள்ளது. இதனால் குழந்தைக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வைத்தியசாலை சாலை கூட்டிச் சென்ற போது குழந்தை இறந்தது தெரிய வந்துள்ளது.
இதனை நடிகர் பிரதிஷ் ரசிகர்களுக்கு தெரிவித்ததுடன் குழந்தையின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கும் படியும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.!