" "" "

6 வருடங்களுக்கு முன்பு “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில் படுக்கையில் படுத்த படி கலந்து கொண்ட இளைஞன்.! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் இதோ.!!

“சொல்வதெல்லாம் உண்மை” இந்த நிகழ்ச்சியை கேலி கிண்டல் செய்யாதவர்கள் இல்லை என்று சொல்லலாம்.நிர்மலா, சுதா சந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் என பலர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ் பேசும் மக்களை கவர்ந்த நிகழ்ச்சியாகவும் இருந்தது, குடும்ப பிரச்சனைகளே அதிகம் பேசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சில மறைக்கப் பட்ட உண்மைகளும் வெளியே வந்தது.

இருப்பினும் பல கள்ளக் காதல்கள், திருமண முறிவுகள் என்று பல கேலி கிண்டல்களை சந்தித்தது, இது இப்படி இருக்க உதவி தேவைப்பட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் 2014ம் ஆண்டு விபத்து ஒன்றில் கை கால்கள் நடக்க முடியாமல், எழுந்து இருக்க கூட முடியாத இளைஞர் ஒருவரும் கலந்துகொண்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அவரது அம்மா அவரை அழைத்து வந்திருந்தார். வாழ்க்கையே தொலைந்து போய்விட்டது என ஆதங்கப் பட்ட இளைஞருக்கு லக்சுமி ராமகிருஷ்ணன், ஆறுதல் அளித்ததுடன் டாக்டர்கள் உனக்கு உதவுவார்கள் என பல டாக்டர்களிடம் பேசி உதவியும் எடுத்துக் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சி முடிந்து 6 வருடங்கள் முடிந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்த இளைஞரை சந்தித்துள்ளார். தற்போது ஆரோக்கியமான இளைஞராக இருக்கும் அவர் சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார். இதனை லட்சுமி ராமகிருஷ்ணன் பகிருந்துள்ளார்.!