உயிருக்கு போராடிய தங்கள் குழந்தையை காப்பாற்றிய நடிகரின் பெயரை குழந்தைக்கு வைத்த பெற்றோர்.!! வில்லனாக இருந்தாலும் இவர் தான் நிஜ ஹீரோ.!!
யார் நல்லது செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு நடிகர் சோனு சூட் உதாரணமாக இருக்கிறார். ஒஸ்தி உட்பட பல திரைபடங்களில் வில்லனாக நடித்த சோனு சூட் மக்கள் மத்தியில் ஹீரோவாக இருக்கிறார். மக்கள் பணத்தில் வாழும் பலருக்கு மத்தியில் சொந்த பணத்தை மக்களுக்காக செலவு செய்து வருகிறார். இதனால் மக்கள் சோனு சூட்க்கு சிலை வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனக்கு பிறந்த குழந்தைக்கு பெண் ஒருவர் சோனு என பெயர் சூட்டியுள்ளார். குறித்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை மிகவும் எடை குறைந்த நிலையில் பிறந்துள்ளது. அத்துடன் குழந்தைக்கு உடனடியாக சில சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்துள்ளது..இதற்கு குழந்தையின் பெற்றோரிடம் வசதி இருக்கவில்லை.
இதனால் சோனு சூட்டின் உதவியை நாடி உள்ளார். உடனே முன்வந்த சோனு சூட் வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு குழந்தைக்கு உடனடியாக சிகிச்சைகளை ஆரம்பிக்கும் படி கூறியுள்ளார். அத்துடன் பெற்றோரிடம் கவலை பட வேண்டாம் என்றும் குழந்தை குணமடைந்து விடுவார் எனவும் ஆறுதல் கூறியதுடன் வைத்தியசாலையுடன் தான் எப்போதும் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்,
இதனை தொடர்ந்து சிகிச்சை முடிந்து தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததுடன் சோனுவின் பெயரையே குழந்தைக்கு வைத்துள்ளனர். சோனுவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.!!
Another SONU in the house. 🤗
Thanks Dr Sukumar @INCORHospitals .👍@IlaajIndia https://t.co/eVBJQfPujD
— sonu sood (@SonuSood) December 31, 2020