இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு..!!

கொடிய உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸால் இலங்கையில் புதிதாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.