டி20யின் உலகின் தலைசிறந்த துவக்க வீரர் என்ற பெருமையை பெற்று கொண்ட அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டாம் மூடி..!
அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டாம் மூடியிடம் ரசிகர்கள் டிவிட்டர் வாயிலாக பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். அந்த கேள்வியில், 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் தலை சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்ட போது, ‘‘இது கடினமான கேள்வி. ஆனால் டேவிட் வார்னர், ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்களை சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன்’’ என்று பதில் அளித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ், பிடித்தமான கேப்டன் டோனி என்று மற்றொரு கேள்விக்கு பதிலை பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட்டில் மனம் கவர்ந்த வீரர் விராட் கோஹ்லி, பிடித்தமான பீல்டர் ரவீந்திர ஜடேஜா என்றும் பதிவிட்டார்.