பிறந்நாளை முன்னிட்டு ஜாகீர் கானை அவமதித்த ஹர்திக் பாண்டியா..!!! கடும் கொந்தளிப்பில் ரசிகர்கள்..!

இந்திய முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாகீர் கானின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் ஹர்திக் பாண்டியா போட்ட ட்விட்டர் பதிவேற்றத்தால் ரசிகர்கள் இடையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 7ம் திகதி பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ஜாகீர் கான்.நனைந்தார் .

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்திய கிரிக்கெட் இளம் வீர்ர ஹர்திக் பாண்டியாவும் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நிலையில் வீடியோவுடன் ட்விட்டரில் பதிவிட்டார். அதில், பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாகீர்… நான் செய்தது போலவே நீங்கள் அடித்து நொறுக்குவீர்கள் என நான் நம்புகிறேன் என ஜாகீர் கான் பந்தில் அவர் சிக்ஸர் அடிக்கும் வீடியோவை பதிவிட்டார்.

இருப்பினும், பாண்டியாவின் பதிவு ஜாகீர் கானை அவமதிப்பதாக கருதிய ரசிகர்கள், ட்விட்டரில் பாண்டியாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாண்டியா நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடலாம், ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்ல வீரராக இருக்க தவறிவிடுகிறீர்கள் மற்ற வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். சாதாரண வாழ்க்கையை வாழ நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என ட்விட்டர் வாசி ஒருவர் பதிவிட்டார்.