சீனாவிற்கு விஜயம் செய்த இலங்கை மகளிர் றக்பி அணி..!!!

எதிர்வரும் ஆண்டு ஜப்பானில் இடம்பெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆசிய மகளிர் றக்பி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் சீனாவிற்கு இலங்கை மகளிர் றக்பி அணி விஜயம் செய்துள்ளது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

ஆசிய மகளிர் றக்பி போட்டியில் தகுதி காண் போட்டி இந்த வார இறுதிப்பகுதியில் சீனாவின் குவென்சூ நகரில் நடைபெறவுள்ளது. A பிரிவின் கீழ் போட்டியில் இலங்கை மகளிர் றக்பி அணியானது சீனா, ஹொங்கொங், தென்கொரியா ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது. தாய்லாந்து, சிங்கப்பூர், கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் B பிரிவின் கீழ் போட்டியிடவுள்ளது.