சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நசீர் ஜாம்ஷெட்..!!!

கடந்த 05 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நசீர் ஜாம்ஷெட் தன் மீது சுமத்தி வந்த சூதாட்ட புகாரை மறுத்த நிலையில் அவர் குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றம் நிரூபித்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 45 ஒருநாள் போட்டிகள், 18 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நசீர் ஜாம்ஷெட் விளையாடியுள்ளவர். கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியிலும், அதற்கு முதல் வருடம் நடைபெற்ற வங்கதேச பிரீமியர் லீக் போட்டியிலும் சூதாட்ட புகாரில் ஜாம்ஷெட் சிக்கிய நிலையில், இவர் மீது சாட்டப்பட்ட குற்றம் தொடர்பாக பிரித்தானிய நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தி, அவர் அனைத்து விதமாக கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 வருடங்கள் தடை விதித்தது. பாகிஸ்தானின் ஷர்ஜீல் கான், காலித் லதீப்பும் இந்த சூதாட்ட புகாரில் சிக்கி 05 வருடங்கள் தடை பெற்றனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ஜாம்ஷெட் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். மேலும் இது போன்ற நிலையில் ஜாம்ஷெட் உட்பட 03 பேர் மீதான குற்றச்சாட்டு பிரித்தானியாவின் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மூவருக்கான தண்டனை விபரம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளது.