" "" "

ஸ்ரீராம பக்தன் ஸ்ரீ ஆஞ்சநேயர் உயிருடன் இருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா.? இதோ ஆதாரம்..படியுங்கள், பிடித்தால் பகிருங்கள்.!!

ஆன்மீக தகவலுக்காக காத்திருக்கும் அத்தனை உறவுகளுக்கும் வணக்கம்.! வாழ்க வளமுடன்.. ! இன்று ஆன்மீக தகவல் பகுதியில் நாம் பார்க்கப் போவது ராம பக்தன் ஜெய் வீர அனுமான் பற்றிய சில விடயங்களை. அதாவது ஹனுமான் இந்த பூமியில் உயிருடன் இருக்கிறாரா இல்லையா.? இது பலரது கேள்வியாக இருக்கிறது. சிலர் இல்லை என்று வாதடுகின்றனர்.

சிலர் இருக்கிறார் என்கின்றனர். சில இல்லை அவர் ஸ்ரீ ராமருடன் வைகுண்டத்தில் இருப்பார் என்கின்றனர். உண்மையில் இதில் யார் சொல்வது சரி.? அண்மை காலங்களில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் இமைய மலை பகுதியில் ராட்சத கால்கள் தோன்றியதாகவும்..

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அது ஆஞ்சனேயர் காலாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதே போல் ராமேஷ்வரத்திலும் ராட்சத கால் தடங்கள் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகின இது மட்டும் இன்றி இலங்கை மலையக பகுதியான ஹட்டன் என்ற இடத்தில் திடீரென பாதம் போன்ற அடையாளம் இருந்ததால் மக்கள் அதற்கு பூஜை செய்து பரபரப்பானதால் தற்போது அந்த பகுதி அரசால் தடை செய்யப் பட்ட பகுதியாக உள்ளதும் நாம் அறிந்தது தான்.

ஹனுமான் பூமியில் இருப்பதற்கான இத்தனை ஆதாரங்கள் இருந்தும் இல்லை அவர் ராமருடன் தான் இருப்பார் என வாதாடுவோருக்கான பதில்கள் இது. ஹனுமான் சிறந்த ராம பக்தன், அதே போல் சிரஞ்சீவி. ஹனுமானுக்கு மரணம் எப்போதும் இல்லை. அதே போல் ராமாயணம் முற்று முழுவதும் படித்தோம் ஆனால் ஹனுமானுக்கு சில கட்டளைகள் பொறுப்புகள் இந்த பூமியில் வழங்கப் பட்டுள்ளது.

அதாவது ஸ்ரீ ராமர் ஆட்சி காலம் முழுவதும் அவருக்கு உதவியாகவும் அவரது வெற்றிகளுக்கு துணை நிப்பவனாகவும் ஹனுமான் பணிபுரிய வேண்டும், ஸ்ரீ ராம ஆட்சி காலம் முடிந்ததும் பூமியில் அராஜகங்கள் தலை தூக்கும் வன்மம் அதிகரிக்கும்.

அந்த நேரங்களில் ராம நாமம் உச்சரிப்பவர்கள்,ஹனுமானை துணைக்கு அழைப்பவர்கள் அனைவருக்கும் ஹனுமானின் உதவி இருக்க வேண்டும். இவை பிரம்ப தேவனால் ஹனுமானுக்கு கொடுக்கப் பட்டவை. எம தர்மனின் ஆயுசு முடிந்தாலும் ஹனுமானின் ஆயுசு நீடிக்கும் ஹனுமானின் உயிரை எடுக்கும் சக்தியோ உரிமையோ எவருக்கும் கொடுக்கப் படவில்லை.

யாரும் உன் உயிரை எடுக்க மாட்டார்கள் நீ சிரஞ்சீவி. இது எம தர்மன் ஆஞ்சனேயருக்கு கொடுத்த வரம். இப்படி இருக்க ஹனுமான் எப்படி பூமியில் இல்லாமல் இருக்க முடியும்.? நாம் ஹனுமான் பூமியில் இல்லை என வாதிட்டால் ராமாயணம், மஹாபாரதம், அனைத்தும் பொய்யாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..!