இலங்கை – இந்திய இரண்டாவது ஆட்டம் இன்று!

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபது-20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் மூன்று போட்டிகளைக் கொண்ட இருபது-20 தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. இதில், முதலாவது போட்டி நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்தபோதும், காலநிலை சீரின்மையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு இந்தூரில் நடைபெறவுள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கும் லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணிக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் போட்டியில் வென்றால்தான் இந்தத் தொடரைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

இரு அணிகளும் இதுவரை ஒட்டுமொத்தமாக 17 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்தியா 11 போட்டிகளிலும், இலங்கை 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஓர் ஆட்டம் முடிவின்றி முடிந்தது. இன்று நடைபெறவுள்ள ஆட்டம் 18ஆவது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.