இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1047 ஆக அதிகரிப்பு..!!

மூன்றாவது இணைப்பு

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1047 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அதன்படி புதிதாக 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1045ஆக அதிகரித்துள்ளது. இந்த 15 பேரும் அண்மையில் டுபாயில் இருந்து வருகைத்தந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு சற்றுமுன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 1028ஆக காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1030ஆக காணப்படுகின்றது. அவர்களில் 435 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 112 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது.