நாடு முழுவதும் குவிக்கப்பட்ட இராணுவம்!

அன்று வடக்கில் இராணுவ ஆட்சி நடத்திய ராஜபக்ச அரசாங்கம் இன்று நாடு முழுதும் நடத்துவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சியில் ராஜபக்ஸ அரசு வடக்கில் கொடூர ஆட்சி செய்தது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய விரிசலை ஏற்படுத்தியது. சர்வதேச ஆதரவையும் இந்த அரசாங்கம் இழந்தது. ஆகவே 2015 ஆம் ஆண்டும் இந்த அரசாங்கம் கவிழ்ந்தது. வடக்கு கிழக்கு மக்கள் ஓரணியில் நின்று ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஸ அரசு நாடு முழுதும் இராணுவத்தை நிறுத்தியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டுக்கும், சர்வதேசத்தின் பார்வைக்கும் நல்லதல்ல. ஆகவே மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கத்தை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.