google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

“நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் முடிவு எப்படி அமைந்தாலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும்” – சுமந்திரன்

ஸ்ரீலங்கா நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் முடிவு எவ்வாறு இருந்தாலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பிற்பகல் தேர்தல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவித்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த வழக்கில் நாம் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒன்று ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தும் அறிவிப்பு தவறானது என்பது. அடுத்தது – நாடாளுமன்றம் கலைத்து மூன்று மாதங்களாகியும் புதிய நாடாளுமன்றம் கூட முடியாத காரணத்தினால் நாடாளுமன்றக் கலைப்புப் பிரகடனம் செல்லுபடியற்றது என்பது. முதலாவது விடயத்துக்கு வழக்கு விசாரணை ஆரம்பித்து முதல் நாளிலேயே முடிவு எட்டி விட்டது. ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது விடயம் தொடர்பில் வழக்கைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத வகையில் நீதிமன்றம் முடிவு செய்து அறிவித்துள்ளது. எனினும் ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்..