மையின் மாநிலத்தில் வெடித்து சிதறிய விடுதி கட்டிடம்…!!!

அமெரிக்காவின் மையின் மாநிலத்துக்கு உட்பட்ட Farmington நகரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ‘LEAP’ என்ற பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

இந்த மையத்தில் தங்கி பலர் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இந்த மையத்தில் விஷவாயு கசிந்ததை கண்ட மையத்தை சேர்ந்த சிலர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

அந்த தகவலுக்கு அமைய அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றி நிலையில் அங்கு கசிவு விஷவாயு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது திடீரென கட்டிடம் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் தீயணைப்பு அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளது. பனி படர்ந்தது போல் காட்சியளிக்கும் இந்த விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் விஷவாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like