ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து…!!!
வத்தளையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பாரிய புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் தீயை அணைக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.