இலங்கையில் பல இடங்களில் தீவிரமாகப் பரவி வருகின்ற டெங்கு…!!!

இலங்கையில் மினுவாங்கொடை தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் டெங்குக் காய்ச்சல் தீவிரகமாக பரவியுள்ளது. அந்த வகையில் மினுவாங்கொடையின் , நில்பனாகொடை, கோப்பிவத்தை, பொல்வத்தை, கல்லொழுவை போன்ற இடங்களில் இது வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நோயாளிகள் கம்பஹா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேவேளையில் கம்பஹா, நீர்கொழும்பு, ராகம வைத்தியசாலைகளில் தற்போது இட நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில், டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

டெங்குக் காய்ச்சல் நோய் பரவியுள்ள இடங்களில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை சுகாதாரப் பிரிவுப் பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் , டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரப் பிரிவுப் பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.