சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை ராஜினாமா செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…!!!

இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான கருத்து முரண்பாட்டில் ஜனாதிபதி மைத்திரி சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை பேராசிரியர் ரோஹண லக்‌ஷமன் பியதாச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் தேர்தல் பிரச்சார பணிகளில் இருந்து ஜனாதிபதி ஒதுங்கி இருப்பார் என்று கூறப்படுகின்றது.

கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்க மைத்திரி இணக்கம் தெரிவித்த போதும், தாமரை சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும் இது போன்ற காரணங்களால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மைத்திரி பதவியில் இருந்து விலகியதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.