கோட்டை பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து….!!!

கொழும்பின் கோட்டை பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் இன்று அதிகாலை 12.40 அளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீவிபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.