வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய துமிந்த திசாநாயக்க…!!!

இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்கவும் சந்தித்து இன்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தனது முழு ஆதரவை வழங்கவுள்ளதாக துமிந்த திசாநாயக்க இன்று காலை கூறியுள்ளார். மேலும் இந்த நிலையில் இன்று அநுராதபுரத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து துமிந்த திசாநாயக்க கோத்தபாயவுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அநுராதபுர மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களின் வாக்குக்களையும் கோத்தபாய ராஜபக்சவிற்கு பெற்றுக் கொடுத்து அவரை அமோக வெற்றியடையச் செய்வதாகவும் துமிந்த திசாநாயக்க இதன்போது உறுதி அளித்துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியியில் இருக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை துமிந்த திசாநாயக்க கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.