ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுப்பு..!!!

இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதையடுத்து ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீ.ல.சு.க.யின் பல தேர்தல் அமைப்பாளர்கள் எதிர்த்துள்ளதாக கூறப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கோட்டாப ராஜபக்விற்கு தனது ஆதரவை வழங்கப்போவதில்லை என சந்திரிக்கா தெரிவித்த நிலையில் சந்திரிகா, எதிர்கால நிலைப்பாடு ஏதும் அறிவிக்காமல் இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த காரணமாக அக்கட்சியின் அமைப்பாளர்கள் எதிர்கால நடவடிக்கை குறித்து தீவிரமாக குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.