நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விடுத்த அழைப்பு..!!!

இலங்கையில் அரசியலில் இளைஞர், யுவதிகள் ஈடுபட முன் வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை அரசியலில் இருந்து 70 வயது தொடக்கம் 80 வயதானவர்கள் ஓய்வு பெற வேண்டும். இளைஞர், யுவதிகள் அரசியிலில் ஈடுபட்டால் அவர்களுக்கு தேவையான முழு ஆதரவையும் வழங்கி ஒத்துழைப்பு வழங்குவேன் என்று சந்திரிக்கா கூறியுள்ளார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாக அழிக்கும் செயற்பாட்டில் பொதுஜன பெரமுன முன்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியாக முறையில் செயற்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனநாயக நடவடிக்கை சிறந்த முறையிலுள்ளதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியை அடியோடு அழிக்க நினைப்போருக்கு வாக்கு அளிப்பதா இல்லையா என்பதை பொதுமக்கள் நீதியான முறையில் சிந்தித்து செயற்பட வேண்டும். இலங்கையில் உள்ள இளைஞர், யுவதிகள் அரசியலுக்கு வந்தால் நான் கம்பு ஊன்றியேனும் வந்து உதவி செய்வேன். சடடவிரோதமாக கொள்ளையடித்து மோசடி செய்யாமல் உழைப்பதற்கு எதிர்பார்க்கும் நன்கு படித்த இளைஞர்கள், யுவதிகளை நாம் அரசியலுக்கு இணைத்துக் கொள்ளவேண்டும்.

அவ்வாறு அவர்கள் அரசியலுக்கு வந்தால் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவி செய்ய தயாராக இருகின்றேன். அதேபோன்று இளைஞர்கள், யுவதிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுப்பதாக சந்திரிக்கா கூறியுள்ளார். கொழும்பு ஊடகத்திற்கு வழங்கிய தகவலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

70வயது தொடக்கம் 80 வயது உடையவர்கள் ஓய்வு பெற வேண்டும். இந்த முறை மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள். தற்போது ஐக்கிய தேசிய கட்சி முன்பை விடவும் ஜனநாயகமாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.